Enable Javscript for better performance
கிராமப் பகுதிகளில் மதுக் கடைகள் அமைப்பதைக் கைவிட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    கிராமப் பகுதிகளில் மதுக் கடைகள் அமைப்பதைக் கைவிட வேண்டும்

    By DIN  |   Published on : 10th April 2017 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகளை கிராமப்புற பகுதிகளுக்கு இடம் மாற்றி அமைப்பதை மாநில அரசு கைவிட வேண்டும் என்று
    தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    இது குறித்து அன்னூரில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், அந்த மதுக் கடைகளை கிராமப்புற பகுதிகளில் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இது கண்டனத்திற்குரியது.
    கிராமப்புறப் பகுதிகளில் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் உள்ளிட்டோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கிராமப்புறப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கும் செயலை மாநில அரசு கைவிட வேண்டும்.
    ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெற்றால், தேர்தல் நியாயமாக இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றார்.
    கோவை வடக்கு புறநகர் மாவட்ட தமாகா தலைவர் குன்னத்தூர் ராமலிங்கம், மாநிலச் செயலாளர் கார்த்திகேயன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வேணுகோபால், ஆனந்தகுமார், நவீன்வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai