Enable Javscript for better performance
திரெளபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மயிலேறிபாளையம் திரெளபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
    ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள மயிலேறிபாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் திரெளபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடுப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வருதல், அன்னம் பாலிப்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
    விழாவில், 8-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு குண்டம் திறப்பும், மாலை 4 மணிக்கு கரும்பு போடுதல் நிகழ்வும் நடைபெற்றன. பக்தர்கள் குண்டத்தில் இறங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி கரகத்துடன் தொடங்கியது. பக்தாóகள் காலை 5 மணிக்கு கோயிலை வந்தடைந்தனர். அக்னி குண்டத்துக்கு பூஜைகள் நடைபெற்ற பின்னர், பக்தர்கள் பயபக்தியுடன் தீமித்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
    விழாவில், மயிலேறிபாளையம், மதுக்கரை, மரப்பாலம், குளத்துப்பாளையம், ஒத்தகால்மண்டபம், மலுமிச்சம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திரௌபதியம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். வரும் 11-ஆம் தேதி மஞ்சள் நீராடுதல், மதியம் 12 மணி அளவில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai