Enable Javscript for better performance
பள்ளி செல்லா குழந்தைகள்: கணக்கெடுப்பு இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை (ஏப்ரல் 10) தொடங்குகிறது.
    அனைவருக்கும் கல்வி இயக்கம், ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை அனைத்துப் பகுதிகளிலும் பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அருள்முருகன் உத்தரவின்பேரில் கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இதுகுறித்த கண்கெடுப்புப் பணி தொடங்கப்படவுள்ளது.
    பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள், மாநகராட்சிக்கு உள்பட்ட துடியலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் த.பிளாரன்ஸ் தலைமையில் பள்ளிக் கல்விக் குழு, மேலாண்மைக் குழு, சத்துணவு, அங்கன்வாடி திட்டப் பணியாளர்கள் உதவியுடன் 15 ஆசிரியப் பயிற்றுநர்கள், சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் இக்கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai