Enable Javscript for better performance
மதுக்கடைகளே இல்லாத பொள்ளாச்சி, பெ.நா.பாளையம்!- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அப்பகுதி பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதனால், இங்கு தனியார் தங்கும் விடுதிகளும் அதிக அளவில் உள்ளன. இதில் தனியார் தங்கும் விடுதிகளில் 6 மதுபானக் கூடங்களும் 13 டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வந்தன.
    உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வந்த 13 மதுக் கடைகளும், 6 மதுபானக் கூடங்களும் மூடப்பட்டன. இதனால், பொள்ளாச்சி நகராட்சி மதுக் கடைகளே இல்லாத நகராட்சியாக மாறியுள்ளது. இது பெண்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
    பெ.நா.பாளையத்தில்...: பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்ட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    பெரியநாயக்கன்பாளையம் நகரில் இந்திரா காந்தி வணிக வளாகம், வண்ணாங்கோவில் வீதி, சாந்தி மேடு, நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் மயானம் அருகே ஒரு கடை மட்டும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலையிலிருந்து 400 மீட்டர் தொலைவுக்குள் உள்ளதால் அக்கடையையும் உடனடியாக மூடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இக்கடையும் மூடப்பட்டது.
    பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வந்த அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டதால் அப்பகுதி பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai