Enable Javscript for better performance
வரும் புத்தாண்டு செழிப்பானதாக அமையும்: குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன்- Dinamani

சுடச்சுட

    

    வரும் புத்தாண்டு செழிப்பானதாக அமையும்: குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன்

    By DIN  |   Published on : 10th April 2017 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டில் மழைப் பொழிவு அதிகரித்து, அனைவருக்கும் செழிப்பானதாக அமையும் என்று குமுதம் ஜோதிடம் வார இதழின் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன் பேசினார்.
    குமுதம் வார இதழ், ஸ்ரீ கணபதி சில்க்ஸ் ஆகியன சார்பில், வரும் ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும் என்பது குறித்த நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இந்த நிகழ்ச்சியில் குமுதம் ஜோதிடம் இதழின் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன் பேசியதாவது:
    நடந்து வரும் துர்முகி ஆண்டில் போதிய அளவு மழை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், வரும் ஹேவிளம்பி ஆண்டில் செவ்வாய், சந்திரன், சுக்கிரன் கட்டங்கள் நல்ல நிலையில் உள்ளதால் தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகரிக்கும். ஹேவிளம்பி ஆண்டு மக்களுக்கு செழிப்பானதாக அமையும்.
    ஜோதிடம் மட்டுமே மனிதனுக்கு வழிகாட்டி. பிறக்கும் குழந்தைத்து ஓராண்டுக்குப் பின்னர் ஜாதகத்தை கணித்துக் கட்டாயம் எழுதி வைக்க வேண்டும். ஜோதிடம் என்பது ரிக், அதர்வண வேதங்களிலேயே உள்ளது. மருத்துவ அறிவியலில் சொல்வதைப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜோதிடம் துல்லியமாகக் கணித்துள்ளது.
    ஜோதிடர்களும் ஜோதிடத்தை வியாபாரமாகப் பார்க்கக் கூடாது. அது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமாகும். ஆகவே, ஜோதிடம் என்னும் மகத்தான பொக்கிஷத்தை நம்முடைய வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
    இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், ஸ்ரீ கணபதி சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் திருவாய்மொழி முத்துசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai