Enable Javscript for better performance
விசைத்தறியாளர்கள் 13-இல் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 20 இடங்களில் வரும் 13-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
    கோவை மாவட்டம், சோமனூரில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம், அதன் தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    விசைத்தறிகள் வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி, தற்போதுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழக அரசு இப்பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதைக் கண்டிப்பதுடன், வரும் 13-ஆம் தேதி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 20 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai