Enable Javscript for better performance
விமானப் படை முன்னாள் வீரரின் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    விமானப் படை முன்னாள் வீரரின் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் திருட்டு

    By DIN  |   Published on : 10th April 2017 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில், விமானப்படை முன்னாள் வீரரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை, சரவணம்பட்டி இன்கம்டேக்ஸ் காலனியைச் சேர்ந்தவர் குணசேகர் (62). இவர், விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
    இந்நிலையில், இவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 40 ஆயிரம் வீதம் 2 தடவை பணம் எடுக்கப்பட்டதாக இவரது செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் கடந்த வெள்ளிக்கிழமை வந்துள்ளது. இதுகுறித்து குணசேகர் கொடுத்த புகாரின்பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai