Enable Javscript for better performance
விவசாயிகள் பிரச்னை: பிரதமரை தமிழக எம்.பி.க்கள் சந்திக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் பிரச்னை: பிரதமரை தமிழக எம்.பி.க்கள் சந்திக்க வேண்டும்

    By DIN  |   Published on : 10th April 2017 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண பிரதமர் மோடியை தமிழக எம்.பி.க்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
    கேரள மாநிலம், பாலக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்கள் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது. திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். திமுக வெற்றி பெறக் கூடாது. காரணம் முந்தைய ஆட்சிக் காலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு மத்திய அரசு காரணம் கிடையாது.
    நிற வெறி தொடர்பாக தருண் விஜய் கூறிய கருத்து ஏற்க முடியாதது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒரே மரபணு (டி.என்.ஏ.) கொண்டவர்கள். இதில் வேறுபாடு கிடையாது.
    தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், விவசாயிகளுக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண பிரதமர் மோடி மற்றும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரை தமிழக எம்.பி.க்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai