Enable Javscript for better performance
வெள்ளலூர் தடுப்பணையை தூர்வாரிய தன்னார்வலர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து வெள்ளலூர் குளத்துக்கு நீர் செல்லும் தடுப்பணையை ஞாயிற்றுக்கிழமை தூர்வாரினர்.
    கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் முகநூல் மூலமாக, கோவையில் உள்ள குளங்களைத் தூர்வார தன்னார்வலர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைக்கப்பட்டனர். பின்னர் கட்செவி அஞ்சலில் ஒரு குழுவை உருவாக்கி, விடுமுறை நாள்களில் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    முதல்கட்டமாக, பேரூர் பெரிய குளத்தில் இருந்த சீமைக் கருவேல மரங்கள், காட்டாமணக்குச் செடிகளையும் அகற்றினர். இதையடுத்து, செல்வசிந்தமாணி குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மற்றொரு தன்னார்வ அமைப்புடன் இணைந்து அகற்றினர்.
    இந்நிலையில், வெள்ளலூர் குளத்துக்கு நீர் செல்லும் பாதையில் உள்ள புதர்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றி, தூர்வார முடிவு செய்தனர். இதன்படி, வெள்ளலூர் குளத்துக்கு நீர் செல்லும் பாதையில், தடுப்பணை அமைந்துள்ள சுண்ணாம்புக் காளவாய் பகுதியில் ஞாயிற்றுகிழமை தூர்வாரும் பணியில் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டனர்.
    கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த 100 பேர், மாநகராட்சி ஊழியர்கள் 20 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். இயந்திரங்கள் மூலமாக புதர்கள் அகற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai