Enable Javscript for better performance
ஸ்ரீலட்சுமி வித்யா பவன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீலட்சுமி வித்யா பவன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    By DIN  |   Published on : 10th April 2017 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சிபுரத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    இதில், 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்று, தங்களது படைப்புகளைக் கண்காட்சியில் வைத்திருந்தனர். மாணவி அருந்தத் வரவேற்றார்.
    இதில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் தலைமையிலான குழுவினரின், நவீன பாதுகாப்பான தலைக்கவசம் படைப்புக்கு முதல் பரிசும், 9-ஆம் வகுப்பு மாணவர் ரோஹித்கிருஷ்ணன் குழுவினரின் படைப்புக்கு இரண்டாம் பரிசும், 7-ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீகுட்டி குழுவினரின், தானியங்கி ரயில்வே கேட் படைப்புக்கும், 8-ஆம் வகுப்பு மாணவி லான்சிஜெனிபர் குழுவினரின் படைப்புக்கும் 3-ஆம் பரிசும் வழங்கப்பட்டன.
    என்ஜிஎம் கல்லூரி இயற்பியல் பிரிவுத் தலைவர் கனகராஜூ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். பள்ளித் தாளாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai