Enable Javscript for better performance
ஆழியாறில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஆழியாறில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி சமூக ஆர்வலர் தனது உடலில் இலைகளைக் கட்டிக் கொண்டு நூதன முறையில் பொள்ளாச்சி-சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.
    இதுகுறித்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த காந்திபூபதி அளித்த மனு விவரம்:
    ஆழியாற்றிலிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
    இந்நிலையில், கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் ஆகிய பேரூராட்சிகளின் கழிவுகளும், அம்பராம்பாளையம், சுப்பேகவுண்டன்புதூர், காளியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளின் கழிவுகளும் நேரடியாக ஆழியாறில் கலந்து விடப்படுகிறது.
    இதனால், ஆற்றுநீர் மாசுபடுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    மேலும், ஆழியாறில் ஆனைமலைப் பகுதியில் ஆகாயத் தாமரைகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், நீரோட்டம் தடைபடுவதுடன், கிருமிகளின் தங்குமிடமாகவும் இருந்துவருகிறது. ஆகவே, ஆழியாறில் கழிவுநீர் கலப்பதையும், ஆகாயத் தாமரைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai