Enable Javscript for better performance
உணவுக் கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    உணவுக் கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

    By DIN  |   Published on : 11th April 2017 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உணவுக் கலப்படம், காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரியவந்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
    செய்தித் தாள்களில் உணவுப் பொருள்களை பொட்டலமிட்டு பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் குளிர்பானக் விற்பனைக் கடைகள், பழச்சாறு விற்பனை நிலையம் மற்றும் சாலையோர சிற்றுண்டிக் கடைகள் நடத்தும் வணிகர்கள் தரமற்ற பொருள்களை விற்பனை செய்யக் கூடாது.
    ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 0422-2220922 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai