ஏப்ரல் 13-இல் வான் நோக்குதல் நிகழ்ச்சி
By DIN | Published on : 11th April 2017 04:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், பொதுமக்களுக்காக இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கொடிசியா சாலையில் அமைந்துள்ள மண்டல அறிவியல் மையத்தில் ஏப்ரல் 13-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு பொதுமக்களுக்கு வான் நோக்குதல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வான் தெளிவாக இருக்கும் நிலையில் இரவு 7 முதல் 8.30 மணி வரையில் தொலை நோக்கி மூலம் பொதுமக்கள் கண்டு களிக்கலாம். இதற்கு அனுமதி இலவசம்.
மேலும் தகவலுக்கு- 0422 2573025. 2570325 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.