Enable Javscript for better performance
சுவரில் மோதிய லாரி: ஓட்டுநர் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி வீட்டின் மதில் சுவரில் மோதியது. இதில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
    கரூரிலிருந்து கோவை நோக்கி மணல் பாரம் ஏற்றிய லாரி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தது. சூலூர் அருகே காங்கேயம்பாளையம் பகுதியில் வந்தபோது, லாரியில் திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையிலிருந்த தடுப்பின் மீது மோதியது. கரூர், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ராமச்சந்திரன் லாரியிலிருந்து குதித்து தப்பினார். பின்னர் அந்த லாரி அருகேயுள்ள விமானப் படை குடியிருப்பு மதில் சுவரில் மோதி நின்றது. கீழே குதித்ததில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai