Enable Javscript for better performance
தடுப்பணையில் உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பொது மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தடுப்பணையில் உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பொது மக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 11th April 2017 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாங்குறிச்சி நீர்வழிப்பாதை தடுப்பணையில் உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கொசுவலையுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கோவை மாநகராட்சி, 32-ஆவது வார்டுக்கு உள்பட்ட விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி அருகே தடுப்பணை உள்ளது. இந்த அணையில், அப்பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து வருகிறது. தடுப்பணையில் தேங்கியுள்ள இந்தக் கழிவுநீரால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இதிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது.
    இந்தக் கழிவுநீரை அகற்றக்கோரி கடந்த 15 நாள்களுக்கு முன்னர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி தலைமையில் பொது மக்கள் சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கழிவுநீரை அகற்றுவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
    இந்நிலையில், 15 நாள்களாகியும் கழிவூநீரை அகற்றாததால் அப்பகுதி மக்கள் விளாங்குறிச்சி நான்கு சாலை சந்திப்பில், கொசுவலையுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த கோவில்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai