Enable Javscript for better performance
நண்பரைக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    நண்பரைக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 11th April 2017 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரைக் கொலை செய்த வழக்கில் நகைப் பட்டறைத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
    கோவை, சீரநாயக்கன்பாளையத்தில் வசித்து வந்தவர் ஏ.ரஃபீக் (38). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (38). இவர் காந்திபார்க் பகுதியில் உள்ள கவரிங் நகைப் பட்டறையில் வேலை செய்து வந்தார்.
    இந்த நிலையில், 2016 மார்ச் 27-ஆம் தேதி ரஃபீக்கின் வீட்டில் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், அருகில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து ரஃபீக்கை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரஃபீக்' உயிரிழந்தார்.
    இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து செல்வராஜைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், செல்வராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி (பொறுப்பு) எம்.கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai