Enable Javscript for better performance
நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: 2 கல்லூரி மாணவர்கள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: 2 கல்லூரி மாணவர்கள் சாவு

    By DIN  |   Published on : 11th April 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையை அடுத்த மரப்பாலம் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
    தூத்துக்குடி, பரதர் நகரைச் சேர்ந்தவர் தங்கசிவராம் (எ) பரத் (21). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிகில்குமார் (21). இவர்கள் இருவரும் மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கல்லூரி வகுப்பு முடிந்து கோவை-பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் அறைக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்க சிவராம், நிகில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai