Enable Javscript for better performance
மருத்துவ விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு துடியலூரில் மருத்துவ விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் கே.முருகேசன் தலைமை வகித்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஆர்.சமரன் முன்னிலை வகித்தார்.
    டாக்டர் மஞ்சு வரவேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், ஹோமியோபதி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.
    இதனையடுத்து டாக்டர் சுதா முன்னிலையில் அனைவரும் உலக ஹோமியோபதி தின உறுதிமொழியேற்றுக் கொண்டனர். டாக்டர் வினி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai