Enable Javscript for better performance
மேட்டுப்பாளையம் அருகே எரித்துக் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் அருகே எரித்துக் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது

    By DIN  |   Published on : 11th April 2017 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் அருகே கடந்த சில நாள்களுக்கு முன் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்து திங்கள்கிழமை அடையாளம் தெரிந்துள்ளது.
    மேட்டுப்பாளையத்தை அடுத்த குட்டையூர், மாதேஸ்வரன் மலையடிவாரப் பகுதியில் கடந்த சில் நாள்களுக்கு முன்னர் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரம்ய பாரதி உத்தரவின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில், ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர்கள் கணேசன் உள்ளிட்டைரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது.
    இந்த விசாரனையில் சடலமாக மீட்கப்பட்டவர் காரமடை, திம்மம்பாளையம், ராம் நகர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (46) என்பது தெரியவந்ததுள்ளது. மேலும், தாமோதரன் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவி மற்றும் குடும்பத்தி னரை மிகவும் தொல்லைபடுத்தி வந்ததாகவும், அதனால் ஆத்திரமுற்ற அவரது மனைவி அனுராதா மற்றும் மகன்கள், நண்பர்கள் துணையுடன் வீட்டிலிருந்த தாமோதரனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்து, உடலை குட்டையூர் மாதேஸ்வரன் மலையடிவாரத்தில் ஆட்டோ நகர் பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் திங்கள்கிழமை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai