Enable Javscript for better performance
ஃபாரூக் கொலை வழக்கு: 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- Dinamani

சுடச்சுட

    

    ஃபாரூக் கொலை வழக்கு: 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    By DIN  |   Published on : 12th April 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி ஃபாரூக் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 6 நபர்களும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

     கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஃபாரூக் மார்ச் 16-ஆம் தேதி நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். நாத்திக கருத்துகளைப் பரப்பியதற்காக இவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், கடைவீதி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     இந்த வழக்கில், அப்துல் முனாப், அக்ரம் ஜிந்தா, ஜாபர் அலி ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்த நிலையில், அன்சாத், சதாம் உசேன், சம்சுதீன் ஆகிய 3 பேர்களும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
     இந்நிலையில், கைது செய்யப்பட்ட 6 பேர்களையும் தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கான உத்தரவு நகல் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai