Enable Javscript for better performance
அகலப் பாதைக்கு ஒப்புதல் கிடைத்தது: போத்தனூர் - பொள்ளாச்சி இடையேவிரைவில் ரயில் போக்குவரத்து- Dinamani

சுடச்சுட

    

    அகலப் பாதைக்கு ஒப்புதல் கிடைத்தது: போத்தனூர் - பொள்ளாச்சி இடையே விரைவில் ரயில் போக்குவரத்து

    By DIN  |   Published on : 12th April 2017 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையிலான அகலப் பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
    போத்தனூர் - பொள்ளாச்சி இடையே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகலப் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. கோவை - பொள்ளாச்சி இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    இதைத் தொடர்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கிய அகலப் பாதை பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. சுமார் ரூ. 344 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் இந்தப் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
    பாலக்காடு கோட்டத்துக்குள்பட்ட பொள்ளாச்சி - கிணத்துக்கடவு, சேலம் கோட்டத்துக்குள்பட்ட கிணத்துக்கடவு - போத்தனூர் இடையே ஒரே நாளில் இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த சோதனையை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.சி.மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    இந்த நிலையில், இந்தப் பாதையில் ரயில்களை இயக்க ஆணையரகத்தின் ஒப்புதல் கிடைத்திருப்பதாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து இந்தப் பாதையில் விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai