Enable Javscript for better performance
அணைப் பராமரிப்பு பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை பகுதியில் நடைபெற்று வரும் அணைப் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித் துறைச் செயலாளர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
    வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு, நீராறு மற்றும் சின்னக்கல்லாறு அணைகளில் ரூ. 22 கோடி செலவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அணைகளின் பராமரிப்புப் பணிகள் மத்திய அரசின் நீர்வளத் துறை ஆணையத்தின் மூலமாக உலக வங்கியின் நிதி உதவியுடன் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர், அணைப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
    முதன்மைப் பொறியாளர் வெங்கடாசலம், செயற்பொறியாளர் மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai