Enable Javscript for better performance
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துஇன்று முற்றுகைப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து இன்று முற்றுகைப் போராட்டம்

    By DIN  |   Published on : 12th April 2017 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் சென்னை தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை (ஏப்ரல் 12) போராட்டம் நடைபெற உள்ளது.
     இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற இருந்த இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுகவின் இரண்டு அணிகள், திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து இடைத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.  எனவே, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது.   மேலும், தமிழகத்தில் கள்ளுக் கடையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளோம். புதுதில்லியில் விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பிரதமரை அவமதிக்கும் செயலாகும். நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்லில் ஹிந்தி எழுத்துகள் மீது தார் பூசி அழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai