ஆர்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் சாதனை
By DIN | Published on : 12th April 2017 08:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சூலூர், ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் நானோ திரவத்தின் மூலம் தண்ணீரை சூடு செய்து சாதனை படைத்துள்ளனர்.
சூலூரில் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் கே.ஜோபின், கே.முத்துராஜவேல், பி.நம்பி கண்ணன், எஸ்.நந்தகுமார், பி.எஸ்.நவீன்ராஜ் ஆகியோர். இவர்கள், நீரில் நானோ திரவத்தைக் கலக்கும்போது வெப்ப ஆற்றலைக் கடத்தும் தன்மை அதிகரிப்பதைக் கண்டறிந்தனர்.
இதனால் சூரிய ஆற்றலை ஒருங்குவித்து தண்ணீரை வெந்நீராக மாற்றியதுடன், நீர் சேமிப்புக் கலனில் பி.சி.எம். என்ற பொருளை நிறுவுவதன்மூலமாக மின்சக்தியின்றியே இரவு முழுவதும் வெப்பத்தைத் தக்கவைத்துள்ளனர். இதற்காக கல்லூரி துணை முதல்வர் பி.ராஜேந்திரன், துறைத் தலைவர் வி.ஆர்.சிவகுமார், இயந்திரவியல் துறை துணைப் பேராசிரியர்கள் ஜி.மைக்கேல்ராஜ், வி.முருகன், ஆர். டைட்டஸ் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர்.