Enable Javscript for better performance
இடிகரை தர்மராஜர் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர்- Dinamani

சுடச்சுட

    

    இடிகரை தர்மராஜர் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர்

    By DIN  |   Published on : 12th April 2017 11:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துடியலூரை அடுத்த இடிகரையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான தர்மராஜர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
    இக்கோயில் திருவிழா கடந்த மார்ச் 26-ஆம் தேதி பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, யுகாதிப் பண்டிகை சிறப்பு வழிபாடுகள், சக்திக் கரகம், திருக்கல்யாணம், சிரசு ஊர்வலம், சகாதேவன் ஊர்வலம், அர்ச்சுனன் சிவனை நோக்கி தபசு செய்தல், பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.
    இதற்காக 60 அடி நீளமுள்ள பூக்குழி உருவாக்கப்பட்டது. கோயில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
    32 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழா நடைபெற்றதால், இடிகரை, கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரன்பாளையம் உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள 25 கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தர்மராஜா சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai