Enable Javscript for better performance
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அ.குமாரபாளையத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
    அ.குமாரபாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலன் (எ) பாலசுப்பிரமணியம் (29), ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் மகன் ரகுவரன் (28). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அ.குமாரபாளையத்தில் இருந்து அன்னூருக்கு சென்று கொண்டிருந்தனர். அமலி அருணா நகர் அருகே வரும்போது, அன்னூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில், பாலன், ரகுவரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    இதுகுறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் நாராயணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai