Enable Javscript for better performance
கண்ணாளன் கென்னடி நினைவிடத்தில் ராணுவ வீரர்கள் வீரவணக்க மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    கண்ணாளன் கென்னடி நினைவிடத்தில் ராணுவ வீரர்கள் வீரவணக்க மரியாதை

    By DIN  |   Published on : 12th April 2017 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த, கீர்த்திசக்ரா விருது பெற்ற நாயக் கண்ணாளன் கென்னடியின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில்,  மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ வீரர்கள் வீரவணக்க மரியாதை செலுத்தினர்.
    பெரியநாயக்கன்பாளையத்துக்கு மேற்கே உள்ள இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான வெங்கிடபெருமாள் - மங்குத்தாய் ஆகியோரின் 4-வது மகன் கண்ணாளன் கென்னடி. இவர் 1984-ஆம் ஆண்டு மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவத்தில் சேர்ந்தார்.
    ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டபோது, கடந்த 1993-ஆம் ஆண்டு தீவிரவாதிகள்  கும்பல் ஆர்.டி.எஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்றது. அப்போது தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தி அதில் 8 தீவிரவாதிகளை நாயக் கண்ணாளன் கென்னடி சுட்டு வீழ்த்தினார். அப்போது தீவிரவாதிகளால் சுடப்பட்டு அங்கேயே வீரமரணம் அடைந்தார். உடனிருந்த படையினரால் 7 தீவிரவாதிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
    கென்னடியின் வீரத்தைப் பாரட்டி, ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்திசக்ரா விருது 1994-இல் வழங்கப்பட்டது. கென்னடி நினைவாக நாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் கென்னடி நினைவுதினத்தில் கடந்த 23 ஆண்டுகளாக வெலிங்டன் மற்றும் ரேஸ்கோர்ஸ் 110 படைப்பிரிவுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், பட்டாலியன் காமாண்டிங் அதிகாரி லோகநாதன் தலைமையில் 40 ராணுவ வீரர்கள் கென்னடியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் மார்ட்டின், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கிருஷ்ணகுமார்,அரசு பள்ளி மாணவ மாணவிகள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கென்னடியின் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai