Enable Javscript for better performance
சாலைப் போக்குவரத்து மசோதாவை கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் போக்குவரத்து மசோதாவை கண்டித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 12th April 2017 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மசோதாவை கண்டித்து சி.ஐ.டி.யூ. ஆட்டோ மற்றும் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     கோவை காந்தி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.செல்வம் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டப் பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் பி.கே.சுகுமார், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்டத் தலைவர் வேணுகோபால், பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபீக் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
    விபத்தில் மரணம் ஏற்பட்டால் 10 ஆண்டு சிறை, சாதாரண வழக்குகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் என சாலைப் போக்குவரத்து மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளவை சாலைப் போக்குவரத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
     இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் எஸ்.செல்வராஜ், எம்.கே.முத்துக்குமார், சாலைப் போக்குவரத்து சங்கத்தின் அப்துல் கலாம், நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai