Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     பொள்ளாச்சியை அடுத்துள்ள கோமங்கலம் புதூரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
     இவர்கள், தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். பி.ஏ.பி. திட்டம் பாதுகாக்கப்பட, நிலுவையில் உள்ள ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திருமூர்த்தி அணையைத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai