Enable Javscript for better performance
மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.   
    மேட்டுப்பாளையம்-காரமடை சாலையிலுள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை பகுதியில் வசிப்பவர் நடராஜன். இவரது மகள் தேவிஸ்ரீ (19). அங்குள்ள தனியார் மகளிர் கல்லூரியில் முதலாண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
    இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற தேவிஸ்ரீ வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து நடராஜன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai