Enable Javscript for better performance
மைதான மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த மைதான மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, கோயிலிலிருந்து அம்மன் அருகிலுள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர், உதகை சாலை வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டார்.  அதைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் தலைமை பூசாரி மோகன்குமார் முதலில் குண்டத்தில் இறங்கினர். அவரைத் தொடர்ந்து பூசாரி நாகராஜன், பொதுமக்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் கையில் குழந்தையுடன் குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். காலையில் துவங்கி மதியம் வரை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    இந்த விழாவில், கோயில் முன்னாள் அறங்காவலர் பாலன், நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, மருதையன், சத்யபிரகாஷ், தலைமை மருத்துவர் சேரலாதன், கோயில் செயல் அலுவலர் விமலா, மேலாளர் மகேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai