Enable Javscript for better performance
வளர்ப்பு மகன் கொலை: கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    குடும்பத் தகராறில் வளர்ப்பு மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி அபுதாகீர் (50). இவருக்கு மனைவி ஆயிஷா (45), மகன்கள் கமாலுதீன், ஜமாலுதீன் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 20 ஆண்டுக்கு முன்பு மனைவியை விட்டு அபுதாகீர் பிரிந்து சென்றார். ஆயிஷா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டின் அருகே வசித்த வந்த கட்டடத் தொழிலாளி பழனிசாமி (58) என்பவருடன் ஆயிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
     இரண்டு குழந்தைகளையும் பழனிசாமி வளர்த்து வந்தார். இந்நிலையில், கமாலுதீன் (24) திருமணம் செய்து கொண்டு பாலக்காட்டில் குடியேறினார். திருப்பூரில் பனியன் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தார்.  மேலும், தாயார் ஆயிஷாவை தன்னுடன் வரும்படி பலமுறை கேட்டு வந்துள்ளார்.
     இதுதொடர்பாக பழனிசாமிக்கும், கமாலுதீனுக்கும் அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2013 மே 5-ஆம் தேதி கமாலுதீன், தனது தாயார் ஆயிஷாவை அழைத்துச் செல்வதற்காக பாலக்காட்டில் இருந்து செல்வபுரத்துக்கு வந்தார்.
     அப்போது பழனிசாமி, கமாலுதீன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனிசாமி, சம்மட்டியால் தாக்கியதில் கமாலுதீன் உயிரிழந்தார்.
     இதுகுறித்து செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பழனிசாமியை கைது செய்தனர். கோவை 4-ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விஜயா தீர்ப்பளித்தார். மேலும், உயிரிழந்த கமாலுதீன் மனைவி, அவரது 2 குழந்தைகளுக்கும் தமிழ்நாடு சட்ட உதவி மையம் மூலம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai