Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியலுக்கு முயன்ற 42 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியலுக்கு முயன்ற 42 பேர் கைது

    By DIN  |   Published on : 12th April 2017 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியலில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28 நாள்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் புதுதில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
     இவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் அன்சர் செரீப் தலைமையில் அக்கட்சியினர் செவ்வாய்க்கிழமை கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.  
    இந்தப் போராட்டத்தில் கட்சியின் மண்டலத் தலைவர் எ.முஸ்தபா, மத்திய மாவட்டத் தலைவர் அப்துல்காதர், மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai