Enable Javscript for better performance
அதிக பாரம் ஏற்றி வந்த 5 மணல் லாரிகள் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் அருகே அதிக பாரம் மணல் ஏற்றி வந்த 5 லாரிகளை சூலூர் மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தி போலீஸில் ஒப்படைத்தனர்.
    அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேலாக மணல் ஏற்றிக் கொண்டு 5 லாரிகள் கரூரிலிருந்து கோவைக்கு வருவதாக சூலூர் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், அந்த 5 லாரிகளையும் சூலூரில் தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த லாரிகளை சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    இதுகுறித்து லாரி ஓட்டுநர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai