Enable Javscript for better performance
அரசுக் கல்லூரி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை அரசுக் கலைக் கல்லூரி வளர்ச்சி குறித்து பல்வேறு அமைப்பினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    வால்பாறையில் பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இக்கல்லூரி சின்கோனா, வால்பாறை நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 1,400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால், ஆண்டுதோறும் சேர்க்கை குறைந்து தற்போது 1,200 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    இந்நிலையில், பல்வேறு ஊர்களில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு மாணவர்களை தங்கள் கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவே வால்பாறை கல்லூரியில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
    இந்நிலையில், கல்லூரியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
    இப்பகுதி மக்களின் குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிப்பது, இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai