Enable Javscript for better performance
அருந்ததியர் மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியரிடம் புகார் மனு- Dinamani

சுடச்சுட

    

    அருந்ததியர் மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியரிடம் புகார் மனு

    By DIN  |   Published on : 13th April 2017 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆதித்தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் வெண்மணி அளித்த புகார் மனு விவரம்:
    கோவை மாவட்டம், பேரூர் தாலுகா, தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட புள்ளகவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வரும் அருந்ததியர் மக்கள் மீது வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    மேலும் அருந்ததிய மக்களின் வீடுகள், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும் பெற்றுத் தரவேண்டும். அதே நேரத்தில் தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய வேண்டும். மேலும், அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அருந்ததியர் மக்கள் பாதுகாப்புடன் வசிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai