Enable Javscript for better performance
ஆதரவற்ற 2 பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆதரவற்ற 2 பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

    By DIN  |   Published on : 13th April 2017 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகள் தனியார் காப்பகத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
    கடந்த ஆண்டு ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அக்குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
    இந்நிலையில், குழந்தைகளின் உடல் நிலை ஆரோக்கியம் அடைந்ததையடுத்து, அந்த 2 குழந்தைகளும் கிணத்துக்கடவில் உள்ள சரணாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்திடம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மூலமாக ஒப்படைக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ஆர்.சௌந்தரவேல், காப்பக நிர்வாகத்திடம் குழந்தைகளை ஒப்படைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai