Enable Javscript for better performance
இரண்டாவது திருமணம்: பெண் புகார்; கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    கோவை, குறிச்சி ஹவுஸிங் யூனிட் பகுதியில் வசித்து வருபவர் டி.ஏ.சுலைமான் (35). இவரது மனைவி சல்மா (30). இத்தம்பதிக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். சுலைமான் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
     இந்நிலையில், சல்மா போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதில், எனது கணவர் சுலைமான் மது அருந்திவிட்டு வந்து ஆபாசப் படங்களைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். ஆனால் அவர் இரண்டாவதாக ரெய்னா யாஸ்மின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு எனது 20 பவுன் நகைகளையும் அபகரித்து இரண்டாவது மனைவிக்கு கொடுத்து விட்டார்.
     இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனது கணவர் சுலைமான், ரெய்னா யாஸ்மின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போத்தனூர் காவல் துறையினர் சுலைமான் மற்றும் அவரது இரண்டாவது மனைவியையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai