Enable Javscript for better performance
உத்தரகண்ட் ஆளுநர் குன்னூர் வருகை- Dinamani

சுடச்சுட

    

    வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உத்தரகண்ட் ஆளுநர் கிருஷ்ணகாந்த் பால் புதன்கிழமை குன்னூர் வந்தடைந்தார்.
    நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டனிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடப்பு ஆண்டில் பயிற்சி முடித்த இந்திய மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்குப் பட்டமளிக்கும் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.
    இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்தரகண்ட் மாநில ஆளுநர் கிருஷ்ணகாந்த் பால் பங்கேற்கிறார். இதற்காக அவர் தில்லியில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை மாலை 4.15 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
    பின்னர், ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மாலை 4.30 மணி அளவில் வெலிங்டன் புறப்பட்டார். ஆனால், குன்னூரில் பெய்து வரும் மழை காரணமாக ஹெலிகாப்டர் தரை இறங்க இயலாததால் மாலை 4.45 மணி அளவில் ஹெலிகாப்டர் மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து, கார் மூலம் பலத்தப் பாதுகாப்புடன் மாலை 5.05 மணி அளவில் அவர் வெலிங்டன் புறப்பட்டார்.
    இந்நிலையில், வெலிங்டன் வந்த ஆளுநரை ராணுவ உயர் அதிகாரிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai