Enable Javscript for better performance
காயங்களுடன் சாக்கடையில் கிடந்த இளைஞர் மீட்பு: தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    காயங்களுடன் சாக்கடையில் கிடந்த இளைஞர் மீட்பு: தொழிலாளி கைது

    By DIN  |   Published on : 13th April 2017 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, சாய்பாபா காலனி அருகே சாக்கடையில் பலத்த காயங்களுடன் கிடந்த இளைஞரை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக தொழிலாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டின் பின்புறத்தில் உள்ள சாக்கடையில் பலத்த காயங்களுடன் இளைஞர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற சாய்பாபா காலனி போலீஸார், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், காயமடைந்தவர் ஆவுடையப்பன் (30) என்பது மட்டும் தெரியவந்தது. வெளியூரில் வசித்து வரும் ஆவுடையப்பன் முன்பு இந்த மார்க்கெட்டில் வேலை செய்து வந்ததாகவும், அந்தப் பழக்கத்தின்பேரில் நண்பர்களைப் பார்க்க செவ்வாய்க்கிழமை கோவை வந்துள்ளார். அப்போது நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவரை சிலர் தாக்கி சாக்கடையில் வீசிச் சென்றது தெரியவந்தது.
    இதனிடையே, இந்த வழக்குத் தொடர்பாக மார்க்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளியான வன்னீஸ் என்கிற வன்னிராஜனை (22) போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
    மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai