Enable Javscript for better performance
பழைய பிளாஸ்டிக் கிடங்குகளில் தீ- Dinamani

சுடச்சுட

    

    கோவை, கரும்புக்கடை பகுதியில் உள்ள 4 பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்புக் கிடங்குகளில் அடுத்தடுத்து புதன்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    கோவையை அடுத்த கரும்புக்கடை பூங்கா நகரில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், இப்பகுதியில் பழைய பிளாஸ்டிக் கிடங்குகளும் உள்ளன. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் சாரமேடு பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பவரின் பிளாஸ்டிக் கிடங்கில் இருந்து புகை வெளியேறியது. அந்தப் புகையில் இருந்து பரவிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்தத் தீயானது அருகில் இருந்த ராஜா, சதாம் உசேன் ஆகியோரின் பிளாஸ்டிக் கிடங்குகளிலும், சபீர் என்பவரது பழைய இரும்புக் கிடங்கிலும் பரவியது. இதில் எளிதில் தீ பிடிக்கக்கூடிய கேபிள் வயர்கள், பிளாஸ்டிக் டிரம் போன்ற பொருள்கள் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
     கோவை தெற்கு, வடக்கு, பீளமேடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. குனியமுத்தூர் காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    சுமார் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் காலை 7.30 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் லட்சக்கணக்கானப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai