Enable Javscript for better performance
மக்கள் தொடர்பு முகாம்: 63 பேருக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    கோவை, மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 63 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியதாவது:
    மக்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத் துறை அரசு முதன்மை அலுவலர்களைக் கொண்டு மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள கிராமப் புறங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
    இந்த முகாமில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, 22 பயனாளிகளுக்கு ஜாதிச் சான்று, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், 4 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டிகள், 4 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சான்று, வேளாண்மைத் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு விதை தெளிப்பான் மானியம், சிவப்பு கூண்வண்டு இனக் கவர்ச்சி பொறி மானியம், விதைகள், தோட்டக் கலை சார்பாக ஒரு பயனாளிகளுக்கு பண்ணை சீரமைப்புக்கான செயல்முறை என மொத்தம் 63 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
    இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம், கோட்டாட்சியர் மதுராந்தகி, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் தனித் துணை ஆட்சியர் சென்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai