மதுக்கடை அமைக்க இடம் கிடைக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் தவிப்பு
By DIN | Published on : 13th April 2017 07:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வால்பாறையில் பகுதியில் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடத்தில் மாற்றி அமைப்பதற்கான இடம் கிடைக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, வால்பாறை நகரில் செயல்பட்டு வந்த 4 மதுக்கடைகளும் மூடப்பட்டன. வால்பாறை நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள சோலையாறு அணை பகுதியில் மட்டும் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுக்கடைகளுக்கான மாற்று இடத்தை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மாற்று இடம் தேடி அலைந்து வருகின்றனர். இந்நிலையில், மதுக்கடைகள் இல்லாவிட்டாலும் வால்பாறையில் உள்ள பெட்டிக்கடை, திறந்தவெளி பகுதி, எஸ்டேட் கடைகள் என பெரும்பாலான பகுதிகளில் மது விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. இங்கு மது பாட்டில்களுக்கு உண்டான விலையைவிட ரூ. 100 கூடுதலாக விற்கப்படுகிறது. இதனால் மது அருந்துவோருக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று இப்பகுதியினர் கூறுகின்றனர்.