Enable Javscript for better performance
"மதுக் கடைக்கு எதிராக போராடியவர்களை தாக்கியது கண்டனத்துக்குரியது'- Dinamani

சுடச்சுட

    

    "மதுக் கடைக்கு எதிராக போராடியவர்களை தாக்கியது கண்டனத்துக்குரியது'

    By DIN  |   Published on : 13th April 2017 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல்  கண்டனத்துக்குரியது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
    திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக தொடங்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட அப்பகுதி மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுக்கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி சாமாளபுரத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.  இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை சந்தித்து பேசினார்.    
    இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சாமாளபுரத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்துக்குரியது. குறிப்பாக பெண்களைத் தாக்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, திரைப்பட நடிகர் ரஞ்சித் சாமளாபுரம் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்தார்.
    உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai