Enable Javscript for better performance
வேலை வாங்கித் தருவதாக  ரூ. 40 லட்சம் மோசடி: தனியார் நிறுவனம் மீது இளைஞர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    வேலை வாங்கித் தருவதாக  ரூ. 40 லட்சம் மோசடி: தனியார் நிறுவனம் மீது இளைஞர்கள் புகார்

    By DIN  |   Published on : 13th April 2017 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
     இதுகுறித்து, கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 20 பேர் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் அளித்த புகார் மனு விவரம்:
     கோவை, லாலி சாலையில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில்   விமான நிலையம், வங்கிகள் மற்றும் வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதனை நம்பி படித்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு தகுந்தவாறு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 40 லட்சம் வரை செலுத்தினோம். அந்த நிறுவனத்தினரும் எங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர். இதைத் தொடர்ந்து, வேலையில் சேர முயன்றபோது அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது.
     இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, உரிய பதிலை அளிக்காமல் மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai