Enable Javscript for better performance
அடிக்கடி பழுதாகும் ஆவாரம்பாளையம் ரயில்வே கேட்: வாகன ஓட்டிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    அடிக்கடி பழுதாகும் ஆவாரம்பாளையம் ரயில்வே கேட்: வாகன ஓட்டிகள் அவதி

    By DIN  |   Published on : 14th April 2017 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, ஆவராம்பாளையம் ரயில்வே கேட் அடிக்கடி பழுதாவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    கோவை, ஆவராம்பாளையத்தில் உள்ள ரயில்வே கேட் வியாழக்கிழமை மாலை மூடப்பட்டது. ஆனால், அதன் பிறகு சிக்னலுக்கு வரும் மின்சாரம் தடைபட்டதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஊழியரால் கேட்டை திறக்க இயலவில்லை. அப்போது கேட்டின் இரு புறங்களிலும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் தேங்கி நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள், ரயில்வே கேட் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கேட் மூடப்பட்டதால் சத்தி, கணபதி, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இந்த ரயில்வே கேட் கடந்த ஒரு மாதத்தில் 5 முறை பழுதாகியுள்ளது.
    இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டிகள் கூறுகையில், கோவை மாநகரின் முக்கியப் பகுதியில் உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் அடிக்கடி பழுதாகிறது. இதனால், அன்றாடம் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமின்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    ஆகவே, பழுதடைந்த கேட்டை மாற்றி விட்டு தானியங்கி சிக்னலுடன் கூடிய புதிய கேட் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai