Enable Javscript for better performance
கடத்தப்பட்ட 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் கேரளத்துக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை உணவு வழங்கல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    கோவை, மதுக்கரை வேளந்தாவளம் சோதனைச் சாவடி அருகே உணவு வழங்கல் துறை பறக்கும் படை வட்டாட்சியர் கோகிலாமணி தலைமையில் உணவு வழங்கல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் 3 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்தி வந்த இருவர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
    இதையடுத்து கடத்தப்பட்ட ரேஷன் அரிசியும், இருசக்கர வாகனத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai