Enable Javscript for better performance
கர்ப்பிணிகளுக்கு சிறுதானியப் பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகராட்சி நகர் நல மையங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக சிறுதானியப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
    கோவை மாநகராட்சி மற்றும் சன்லாக் அக்ரோ நிறுவனம் இணைந்து மாநகராட்சி நகர்நல மையங்களுக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் தொடர்ச்சியாக வியாழக்கிழமை சிறுதானியப் பொருள்களை 6 மாத காலத்துக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.
    எஸ்.எல்.எம். ஹோம் நகர் நல மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100 பேருக்கு 250 கிராம் திணை சிறுதானியப் பாக்கெட்டுகளை வழங்கி மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி ஆகியோர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai