Enable Javscript for better performance
குழந்தையைக் கொன்ற தாய் தற்கொலைக்கு முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    காரமடை அருகே பெட்டதாபுரத்தில் மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஆண் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார்.
    பெட்டதாபுரத்தில் வசிப்பவர் சுரேஷ். இவரது மனைவி வினிதா. இவர்களது மகன் சுஜய் (2). இக்குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருந்துள்ளது. நீண்ட காலமாக பல்வேறு மருத்துவமனைகளில் இக்குழந்தைக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்ட வினிதா, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சுஜய்க்கு சாணி பவுடர் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு வியாழக்கிழமை முயன்றார். சிறிதுநேரத்தில் குழந்தை இறந்து போனது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வினிதாவை காரமடையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கருணாகரன் என்பவர் அளித்த புகாரின்பேரில், பெ.நா.பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயன் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai