Enable Javscript for better performance
கோவையில் 23-ஆம் தேதி நாய்கள் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆனைமலைஸ் கென்னல் கிளப் சார்பில் கோவையில் 3-ஆவது அகில இந்திய நாய்கள் கண்காட்சி ஏப்ரல் 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு யோகேஷ் துதேஜா நடுவராகப் பங்கேற்கிறார். இதில், தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா, ஜேக்ல் ரசல், டால்மேஷன், கிரேட்டேன், புல் மாஸ்டிப், ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட பல்வேறு விதமான நாய்கள் கலந்து கொள்கின்றன. இதில், சில நாய் இனங்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாக கொண்டவையாகும். இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய்களும், நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கண்ணி போன்றவையும் பங்கேற்கின்றன.
    கண்காட்சியில், நாய்களுக்கான உணவு, மருந்துக் கடைகளின் அரங்குகளும் அமைக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வி.எஸ்.ரவி, பா.அர்த்தநாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai